அதிமுக வேட்பாளரின் அனல் பறக்கும் பிரச்சாரம்
கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வரும் 19ஆம் தேதி தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேர்த்து வருகின்றனர். நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதி பாக்குடியில கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து வருகிறார் .
அப்பொழுது அவர் பேசுகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு முறையாவது இங்கு வந்துள்ளாரா? மேலும் அவர் பேசுகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பொய் வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு உதவிகரமாக இருந்த தாலிக்கு தங்கம், லேப்டாப், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விடியா திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் மீண்டும் கிடைத்திட நமது குரல் பாராளுமன்றத்தில் ஒலித்திட நமது வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கரங்களை வலுப்படுத்த திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்
இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் முன்னதாக பாக்குடி கிராமத்திற்கு வந்த வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.