நிலத்தை அபகரிக்க முயலும் முன்னாள் ஒன்றிய செயலாளர்: புகார்

Update: 2023-10-25 16:05 GMT

புகார் அளிக்கும் நில உரிமையாளர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி பிச்சம்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அந்த பட்டா நிலத்தை சுற்றிலும் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த சிலர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இறந்தவரின் பிணத்தை, பட்டா நிலத்தில் கம்பி வேலி மீது ஏறி சேதப்படுத்தி அத்துமீறி பிணத்தை கொண்டு சென்றுள்ளனர். மேலும் பிரபாகர னுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது.

Advertisement

இது குறித்து நிலத்தின் உரிமையாளர் பிரபாகரன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது . மேலும் வேடசந்தூர் தாசில்தாரிடம் முறையிட்டுள்ளார். இதனிடையே இன்று பாதிக்கப்பட்ட பிரபாகரன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News