மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் பழைய கொடிமரம் பரிசோதனை

Update: 2023-12-19 01:54 GMT
 கொடிமரம் பரிசோதனை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாமல்லபுரத்தில், இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ சமய 108 திவ்ய தேசங்களில், 63வது கோவிலாக உள்ளது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் உள்ளிட்ட சுவாமியர் இங்கு வீற்றுள்ளனர். கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடைபெற்றது. அதன்பின், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால், அடுத்தடுத்து நடத்தப்படவில்லை. தற்போது, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுவாமியர் சன்னிதிகள், விமானங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு முந்தைய கொடிமரம், எவ்வித சேதமுமின்றி தற்போதும் நல்ல நிலையில் இருந்தால், தொடர்ந்து பயன்படுத்துவது அல்லது சேதம் இருந்தால், புதிதாக அமைப்பது குறித்து நிர்வாகம் பரிசீலிக்கிறது. இதையடுத்து, கொடிமரத்தின் நிலை குறித்து, நேற்று பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து செயல் அலுவலர் சக்திவேல் கூறியதாவது: கொடிமரத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். நன்றாக இருந்தால் பயன்படுத்துவோம். பாதிக்கப்பட்டிருந்தால் புதிய கொடிமரம் செய்யவும், தேக்குமரம் தயாராக உள்ளது.என்றார். 

Tags:    

Similar News