செயற்குழு கூட்டம்
அனுமந்தித்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.;
அனுமந்தித்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமந்தித்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த ஒன்றிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்குஒன்றிய செயலாளர் குப்பன் தலைமையில் நடந்தது.கீழ்க்கண்ட தீர்மானங்கள் வருமனதாக நிறைவேற்றப்பட்டதுஅடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி ஜனவரி ஐந்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது இதில் ஊத்தங்கரை ஒன்றியம் சார்பாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
வீட்டுமனை பட்டா கேட்டு காட்டேரி ஊராட்சியில் உள்ள அனுமந்திருத்தம் இலக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பல மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து.ஜனவரி 5 ல் ஆர்ப்பாட்டம்.நிர்வாக நலன் கருதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க ஆணையிட தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை ஒன்றிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர்.விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி.ஒன்றிய தலைவர் வடிவேல்.மற்றும் செல்வராஜ் மணி பாலன் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.