தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..;

Update: 2024-01-01 10:26 GMT
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. இன்று திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட நகர ஒன்றிய இளைஞரணி மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் பழனி தைப்பூச மண்டகப்படிக்கு வரும் தலைவர் ஜான் பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டுதல் சிறப்பான வரவேற்பு அளித்தல் தென்மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் அனைத்து மாநில மாவட்ட நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுதல் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News