திருப்பத்தூரில் கேஜி மாணவர்களுக்கு காவல் நிலையம் குறித்து விளக்கம்!

திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனியார் பள்ளி எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.;

Update: 2024-02-23 07:46 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனியார் பள்ளி எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு காவல் நிலையம் செயல்பாடுகள் குறித்து விளக்கம்! ராணுவ வீரர் உடை மற்றும் போலீசார் உடை அனிந்து வந்த மாணவர்கள்! பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போலீசார்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சக்தி கிண்டர் கார்டன் தனியார் பள்ளி எல்கேஜி மற்றும் யுகேஜி பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்தனர்.

Advertisement

இவர்களை திருப்பத்தூர் நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மாணவ மாணவிகளை பூங்கொத்துக்கொடுத்தும் இனிப்புகள் கொடுத்தும் வரவேற்றனர். அதன் பின்னர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் வருகை பதிவேடு, மேலும் காவல் நிலையத்தில் காவலர்கள் என்னென்ன செய்வார்கள் என்பது குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ராணுவ உடையிலும் போலீசார் உடையிலும் மாணவர்கள் வந்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News