ஒரத்தநாட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிப்பு

ஓரத்தநாடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வருகிற 26 ஆம் தேதி வரை கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-11-04 08:28 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஓரத்தநாடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வருகிற 26 ஆம் தேதி வரை கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ஓரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், தஞ்சை விற்பனைக் குழுவிற்குட்பட்ட ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டு 1-4-2023 முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற வீதத்தில் விவசாயிகளிடமிருந்து அரவை தேங்காய் கொப்பரை, நாஃபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

இதுவரை 1,602 விவசாயிகளிடமிருந்து 2,499 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டுயய கொப்பரை தேங்காய் கொள்முதல் வருகிற 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 1000 டன் கொப்பரை கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி தற்சமயம் சிறு, குறு விவசாயிகள் நலனை கருதி அவர்களிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இத்திட்டத்தின் மூலம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். மேலும் நீட்டிப்பு காலத்தில் 170 சிறு, குறு விவசாயிகளிடமிருந்து 242.700 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  விவசாயிகளின் வங்கிக் கணக்கில், தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுவதுடன் தரத்தின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  எனவே, இப்பகுதியைச் சார்ந்த தென்னை விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு" கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News