வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
சேலத்தில் வாலிபரிடம் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-03-04 13:25 GMT
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ஜீவா (22). இவர் நேற்று மதியம் கிச்சிப்பாளையம் குறிஞ்சிநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் ஜீவாவை ஆபாசமாக சேலத்தில் நடந்து சென்ற ஜீவாவை ஆபாசமாக பேசியதுடன், திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் ஜீவா புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்தியைக்காட்டி பணம் பறித்த பச்சப்பட்டி ஆறுமுக நகரைச்சேர்ந்த சந்தோஷ்குமார் (27) மற்றும் சதீஸ்குமார் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.