தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
சேலத்தில் துனிகரம்: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு.;
Update: 2024-04-18 06:49 GMT
கத்தியை காட்டி பணம் பறிப்பு
சேலம் பள்ளப்பட்டி ஜவகர் மில் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 48). தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மயானம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், முரளி மீது மோதுவது போல் வந்துள்ளார். பின்னர் அவர் முரளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி முரளி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முரளியிடம் பணத்தை பறித்தது சின்னேரி வயக்காட்டை சேர்ந்த பாண்டியன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.