நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு
அரியலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருசக்கர வாகன மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Update: 2023-10-28 05:32 GMT
அரியலூர் அருகே குருமஞ்சாவடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி அம்பிகா. இவர் அரியலூர் பெரம்பலூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பணம் வைத்திருந்த பையினை பறித்து சென்றுள்ளனர். அதில் 25 ரூபாய் பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அரியலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.