வார்டு உறுப்பினரை மிரட்டி பணம் பறிப்பு - 3 பேர் கைது
சுசீந்திரம் அருகே பஞ்சாயத்து உறுப்பினரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-30 03:04 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்போறை பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (57). இவர் அதே பகுதியில் உள்ள குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று நல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தன்துறை காலனியை சேர்ந்த அருண்குமார் (21), கோட்டாறு வீரநகரை சேர்ந்த மைக்கேல் ஜெரின் (20 ) திட்டு விளைப்பகுதியை சேர்ந்த அஜீத் ஆகியோர் இருதயராஜை வழி மறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை இருதயராஜின் கழுத்தில் வைத்து குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 500 பறித்து சென்றனர். இது குறித்து இருதயராஜ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.