காவலர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-03-06 05:45 GMT
கண் பரிசோதனை முகாம்
விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக விருதுநகர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசுகளை மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 காவலர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.