நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல், மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் (25-05-2024) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.;
Update: 2024-05-24 16:35 GMT
கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் NSIT, MGM & கோர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், நாமக்கல் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நாமக்கல்லில் இம்முகாமை நடத்தவுள்ளனா். முகாம் சனிக்கிழமை காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும்.
முகாமில், அறுவை சிகிச்சைக்காக தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்குத் தங்குமிடம், உணவு, போக்குவரத்து அனைத்தும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். கண்புரை நோயாளிகளுக்கு ரூ.1000 மதிப்புள்ள IOL லென்ஸ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.