SDTU தொழிற்சங்கம் நடத்திய கண் சிகிச்சை முகாம்.

பள்ளப்பட்டியில் SDTU தொழிற்சங்கம் நடத்திய கண் சிகிச்சை முகாம்.

Update: 2023-12-27 17:27 GMT
பள்ளப்பட்டியில் SDTU தொழிற்சங்கம், மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி ஷாநகர் கேரளா பேக்கரி எதிரில் உள்ள KGN ஹாலில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமை சோசியல் டெமாக்ரடி ட்ரேட் யூனியன் (SDTU) மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் பாஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SDTU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி , சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கரூர் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக் தீன், கரூர் மாவட்ட முன்னாள் மருத்துவ வணிக சங்க தலைவர் பாப்புலர் அபு, அமுதகவி முனைவர் வாப்பு அபுதாஹிர், SDTU மாநில பொருளாளர் ஹசன் பாபு, ஆகியோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமை சிறப்பித்தனர். மேலும்,இந்நிகழ்வில் கண் பராமரிப்பு மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றி அரசன் கண் மருத்துவர் மயூரா முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியை பள்ளப்பட்டி நகர SDPI செயலாளர் சையது அப்பாஸ் அலி தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் காஜா மொய்தீன் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜக்கரியா , இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மணிமொழி மௌலானா ஆட்டோ நிலைய நிர்வாகிகள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 35 நபர்கள் கண் பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
Tags:    

Similar News