கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி
மதுரையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு ஒவ்வொரு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறுவது வழக்கம் அதேபோல் மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி அண்ணா நகர்,தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நிறைவு பெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியை மேயர் இந்திராணி பொன் வசந்த தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விசாலாட்சி, மற்றும் பொது மேலாளர் உலகநாதன் ம் முன்னிலை வகித்தனர் இந்த பேரணியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னை தெரசா காலேஜ் ஆப் நர்சிங்கில் இருந்து கலந்துகொண்டு தங்கள் கரங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று கண் நீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ்சர்மா மாமன்ற உறுப்பினர்கள் செல்விகார்மேகம், செந்தாமரைக்கண்ணன்,உதவி பொறியாளர் மயிலேறிநாதன் மற்றும் மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள்,கிளை மேலாளர் சுகுமார்,மார்க்கெட்டிங் மேலாளர்மார்க்கெட்டிங் மேலாளர் விஜயகுமார், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு கண் நீர் அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. கண் நீர் அழுத்த நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விசாலாட்சி கண் நீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துக் கூறினார். முடிவில் நன்றியுரை கூறப்பட்டது.