இணையதளங்களில் போலி விளம்பரங்கள் - காவல்துறை எச்சரிக்கை .
Update: 2023-11-03 07:23 GMT
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் பெயர்களில் மிக குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக இணையதளங்களில் போலியான விளம்பரங்களை காண்பித்து அதன் மூலம் மோசடி நபர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே இது போன்ற புகார்களுக்கு சைபர் கிரைம் ஹெல்ப் லைன் 1930, இணையதளம் www.cybercrime.gov.inஇல் தெரிவிக்கலாம். என திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளது.