போலி தங்க நகைகள் வைத்து ரூ. 8 கோடி மோசடி 

பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் போலி தங்க நகைகள் வைத்து ரூ. 8 கோடி மோசடி நடந்துள்ளது; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-29 07:02 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் போலியாக தங்க நகைகள் வைத்து மோசடி நடந்தது  தொடர்பாக அந்த வங்கியின் நிர்வாகத்தினர் மாவட்ட போலீஸ்  கண்காணிப்பாளருக்கு  புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசாரிப்பள்ளம் பகுதி ஜேக்கப் தெருவை சேர்ந்த அருண் ஜோஷி (47) என்பவர் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது.      

அருண் ஜோசியை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் தொடர்புள்ளது  தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் கூறுகையில், -          இந்த மோசடிக்கு அருண் ஜோஷி தான் மூளையாக செயல்பட்டு உள்ளார். தனியார் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இவர்கள் போலி தங்க நகைகளை வைத்து மோசடி செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 3 வங்கிகள் 4 பைனான்ஸ் நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.      

 இதுவரை 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். காப்பர், ஜிங் சல்பேட் ஆகியவை கலந்து போலி நகைகளை உருவாக்கி அதன் மேல் மிகவும் கனமான தங்க மூலம் பூசி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  தலைமாறான மூன்று பேரையும் படிக்க இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News