குளத்தூர் அருகே குடும்பத் தகராறு: இளம்பெண் தற்கொலை
குளத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-25 09:09 GMT
கோப்பு படம்
குளத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள பூசனூர் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி முத்துசெல்வி (25). இந்த தம்பதியருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.
2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் முத்துச்செல்வி நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் மணியாச்சி டிஎஸ்பி (பொ) லோகேஸ்வரன் வழக்குப் பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.