தக்கலை அருகே கால்வாயில் சடலமாக மிதந்த விவசாயி: போலீசார் விசாரணை
தக்கலை அருகே கால்வாயில் சடலமாக மிதந்த விவசாயி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
சடலமாக மீட்கப்பட்ட விவசாயி
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பாலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வில்சன். விவசாயி.இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையாகியுள்ளார்.நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவுகள் தேடியும் வில்சன் குறித்து எந்த தகவலும் இந்த நிலையில் இன்று காலையில் மருவூர்கோணம் ஆற்றில் வில்சன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கொற்றிகோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்சன் குடிபோதையில் ஆற்றில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.