லாரி மோதி விவசாயி பலி
சேலம் மாவட்டம்,காமக்காபாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-18 11:11 GMT
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தலைவாசல் அருகே காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த வர் சின்னத்துரை, (வயது 48). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் தலைவாசலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காமக்காபாளையம் எம். பி. நகர் அருகில் சென்ற போது, எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சின்னத்துரை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த தலை வாசல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நடேசன் (48) என்பவரை கைது செய்தனர்.