சேலத்தில் விவசாயி அடித்துக் கொலை

சேலம் அருகே கடனை திரும்ப கொடுக்கததால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-01 01:11 GMT
கொலை

சேலம் அருகேயுள்ள வீராணம் பள்ளிப்பட்டி ஏரிக்கரையை சேர்ந்தவர் ஜம்பு (எ) சண்முகம் (49). விவசாயியான இவர் கிரேன், டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது அண்ணன் ரவுடி செல்வம். கொண்டலாம்பட்டியை சேர்ந்த அண்ணன், தம்பியான இருவரும், வீராணம் பகுதியில் நிலம் வாங்கி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிப்பட்டியை சேர்ந்த சம்பு என்பவர், அவரது நண்பர்கள் 4பேருடன் அங்கு வந்துள்ளார்.

Advertisement

பள்ளிப்பட்டி சம்புவிடம் கொண்டலாம்பட்டி ஜம்பு 1 லட்சம் கடன் வாங்கி அதனை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். நீண்ட நாட்களாக பணத்தை கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. நேற்று மாலை அங்கு வந்த சம்பு, பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சம்பு, அங்கு கிடந்த ரீப்பர் கட்டையால் ஜம்புவின் பின்தலையில் அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை பார்த்ததும் சம்பு தலைமையில் வந்த 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜம்புவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலையில் தலைமறைவான சம்பு உள்ளிட்ட 6 பேரை தேடி வந்த நிலையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News