வாழை விவசாயி மர்ம சாவு - போலீஸ் விசாரணை
இரணியல் அருகே வாழை விவசாயி மர்மான முறையில் உயிரிழந்ததையடுத்து போலீஸ் விசாரணை.;
Update: 2024-03-08 11:12 GMT
உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் ( 59) வாழை விவசாயி. இவர் மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாஸ்கரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரன் வீட்டின் அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு இறந்தார். பாஸ்கரன் எப்படி இறந்தார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.