விவசாயிகள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
Update: 2024-01-02 11:44 GMT
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் வில்லுக்குறியில் நடைபெற்றது. தலைவர் ஜெபர்சன் ஞானவேல் தலைமை வைத்தார். துணைத் தலைவர் தங்கமரியான் முன்னிலை வகித்தார். செயலாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில், கல்குளம் தாலுகா தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பி.பி கால்வாயில் கடந்த நவம்பர் மாத மழையில் இரண்டாவது முறையாக திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை சரி செய்ய 6 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நெல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த முறை அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது நடப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வேலை நடந்து வரும் பாலத்தின் அடியில் பெருவெள்ளம் வரும்போது மணல் அரிப்பு ஏற்படுவதால், மடையின் அடிப்பக்கத்தில் காங்கிரீட் தளம் அமைத்து பாதுகாக்க வேண்டும், தென்கரை ஊராட்சியை பத்மநாபபுரம் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராள விவசாயிகள் கலந்து கொண்டனர்.