மீன் வளர்ப்பில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு

மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-22 12:00 GMT

மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுத்தல், புறக்கடை மற்றும் கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் உயிருள்ள மீன் விற்பனை மையங்கள் அமைத்தல் திட்டம் போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News