நெற்பயிர் நாசமடைந்ததால் விவசாயிகள் கவலை
நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் பகுதியில் பெய்த மழையால் நெற்பயிர் நாசமடைந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Update: 2024-05-14 07:51 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் பகுதியில் கோடை சாகுபடி நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கோடை மழையால் விளைச்சலுக்கு வரும் நிலையில் வளர்ந்திருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி பிரதீப் கூறியதாவது. இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து திடீரென பெய்த மழையால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பயிர்கள் பாதிப்பால் 10 மூட்டை வர வேண்டிய இடத்தில் வயலில் சாய்ந்துள்ள பயிர்களை அறுவடை செய்தால் மூன்று மூட்டை மட்டுமே மகசூல் கிடைக்கும்.எனவே தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ,என்றார்.