நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! -நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் (https://www.tnagrisnet.tn.gov.in/) 30.09.2024 தேதிக்குள் பதிவு செய்து, பதிவு கட்டணம் ரூபாய் 100/-(ஒரு நூறு மட்டும்) தங்களுடைய பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-07-05 12:07 GMT

நம்மாழ்வார் விருது

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை இரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்து உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்தல் மூலம் பயிர்பாதுகாப்பு, மண்வளம் பாதுகாப்பு மற்றும் மக்களின் உடல் நலத்தையும் காப்பதாகும், வேளாண்மைத் துறையின் மூலம் 2024-25-ம் ஆண்டில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் (SADS) என்ற திட்டத்தின் கீழ், உயிர்ம வேளாண்மையை தானும் சிறப்பான முறையில் செய்வதோடு, அதனை பிற விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு ”சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிக்கான நம்மாழ்வார் விருது” மாநில அளவில் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ.2.5 இலட்சம் மற்றும் ரூ.10,000/- மதிப்புடைய பதக்கம், இரண்டாம் பரிசாக ரூ1.5 இலட்சம் மற்றும் ரூ.7,000/-மதிப்புடைய பதக்கம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1.0 இலட்சம் மற்றும் ரூ.5,000/- மதிப்புடைய பதக்கம் தமிழக அரசால் நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் தகுதிகளாக, குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருப்பதுடன், முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். எந்த விதமான இரசாயன பொருட்களையும் விவசாயத்தில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும் மற்றும் உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.ஆகவே நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் (https://www.tnagrisnet.tn.gov.in/) 30.09.2024 தேதிக்குள் பதிவு செய்து, பதிவு கட்டணம் ரூபாய் 100/-(ஒரு நூறு மட்டும்) தங்களுடைய பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News