ஆடு, மாடு திருடும் கும்பலால் விவசாயிகள் பீதி
திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் ஆடு, மாடுகளை திருடும் கும்பலை போலீசார் இரவு நேர ரோந்தில் ஈடுப்பட்டு கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2024-04-12 01:30 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், சக்கரமநல்லுார், கணேசபுரம், பழையனுார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அப்பகுதிவாசிகள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து உள்ளது. இரவில் டாடா ஏஸ் வாகனத்தில் வரும் கால்நடை திருடும் கும்பல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாடுகளையும், 50க்கும் மேற்பட்ட ஆடுகளையும் திருடி சென்றுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு நடப்பதால் காவல் துறை குறட்டை விடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.