விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-28 17:53 GMT

குறைதீர் கூட்டம் 

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஜீன்- 28ம் தேதி இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கால்நடை வளர்ப்பு, மற்றும் அதற்கான இன்சூரன்ஸ்செய்வது குறித்தும், பயிர் கப்பீடு செய்வது தொடர்புடைய துறைகளின் முதல்நிலை அலுவலர்கள். விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள். சங்கத் தலைவர்கள் விவசாயிகள் பேசுகையில், கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி, ஆத்தூர் சாலையில் உள்ள கோனேரி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்திற்கு ஏதுவாக தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் எனவும், தெரணி கிராமத்தில் சூரிய ஒளி மின் திட்டத்திற்கு விவசாயிகளின் நிலம் பெற்றதில் மோசடி ஏற்பட்ட இதில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்அன்பான உன்னைத்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் வேளாண்மை இணை இயக்குநர் கீதா, உள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News