திருப்பத்தூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது;
குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டம் அரங்கில் ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை தினத்தன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது வாணியம்பாடி உழவர் சந்தையில் உள்ள விவசாய வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்ற காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வாங்கி உழவர் சந்தையில் வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் உள்ளூர் விவசாயிகள் அறுவடை செய்கின்ற குறைந்தபட்ச ஆளவிலான காய்கறிகளுக்கு விலை கிடைப்பதில்லை. எனவே உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு ஏற்படுத்தி உள்ள உழவர் சந்தையில் நடைபெறும் இது போன்ற முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து உள்ளூர் விவசாயிகளின் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காய்கறிகளை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெருமாபட்டு பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரசத்தாலி வாழை பயிரிட்டுள்ளேன். கிருஷ்ணகிரி பகுதியில் மருந்து வாங்கி தெளித்தேன் பூ வைக்கும் நேரத்தில் வாழை மரம் காய்ந்து உலர்ந்து விட்டது கோரிக்கை வைத்தபோது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய துறை சார்ந்த அதிகாரிக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்