விவசாயிகள் குழு பயிற்சி முகாம்!

கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-06-26 03:20 GMT

பைல் படம் 

புதுக்கோட்டை வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் மூலம் கலைஞரின் அனைத்து ஒருங்கிணை கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்பர சன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம், செயல் படுத்தும் முறைகள், திட்டத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள், தரிசு நில தொகுப்பு மூலம் பாசன வசதி அமைத்தல் குறித்து எடுத்துரைத்தார்.

வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வேளாண்மை விரிவாக்க மைய கிடங் கில் உள்ள இடுபொருட்கள் குறித்த விபரங்கள், பசுந்தாள் உர பயிர்கள் சாகுபடி, கோடை உழவு, விதை நேர்த்தி, இயற்கை வேளாண்மையின் முக் கியத்துவம், மண் மாதிரி சேகரித்தல், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத் தின் நோக்கம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக் கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருளரசு, ஸ்ரீநிதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News