தாராபுரத்தில் விவசாயிகள் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு அப்பகுதி விவசாயிகள் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2024-01-29 14:13 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டுஅப்பகுதி விவசாயிகள் 4வது தொடர் காத்திருப்பு போராட்டம்அரசுக்கு உணர்த்தும் வகையில் டேம் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை திறந்து விடக் கோரி அரசாணை இருந்தும் திறந்து விடாத அதிகாரிகளை கண்டித்து 4 வது நாளாக டேம் தண்ணீரில் இறங்கி போராட்டம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொடர் காத்திருப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயி களை 4 முறை பேச்சுவார்த் தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி தொடர்4வது நாளாக டேம் தண்ணீருக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பரறுவிவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் செய்தும் பலமுறை அரசு பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று 4 வது நாளாக அப்பகுதி விவசாயிகள் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியும் வண்ணம் டேம் தண்ணிருக்குள் இரங்கிஉள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருமூர்த்தி அணையின் உபரி நீரை இவர்களுக்கு வழங்காததால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும்,

அதனால் அரசு ஆணையே சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி அரசையும் அரசு அதிகாரியும் கவனத்தை இற்கும் வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News