மின்சாரம் தாக்கி விவசாயிகள் பலி
புளியங்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு விவசாயிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.;
Update: 2024-01-09 10:35 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளைனைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (74), மற்றும் குருசாமி (64) ஆகியோர் நேற்று கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்றனர். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.