பொது வழித்தடத்தை ஆக்கிரமித்த காவலர் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
இராசிபுரம் அருகே பொது வழித்தடத்தை ஆக்கிரமித்த காவலர் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
Update: 2024-03-20 17:20 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் மோளப்பாளையம் பஞ்சாயத்து பழனியப்பனூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழனியப்பனூர் - சிங்களாந்தபுரம் இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த விவசாய நிலத்தை ஒட்டி உள்ள பொது வழித்தடத்தை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பழனியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவன், 35. நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வழித்தடத்தை ஆக்கிரமைப்பு செய்து வேலி போட்டுள்ளார். இதனால், விவசாயி தங்களது விளை நிலத்தில் இருந்து விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும், பொதுமக்கள் கோவில், ஆழ்துளை கிணற்றுக்கு செல்ல முடியாமலும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த பல ஆண்டாக பயன்படுத்தி வந்த பொது வழித்தடத்தை ஆக்கிரமைப்பு செய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டர், எஸ்.பி., வருவாய்துறை ஆகியற்றில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு ஆகியவை ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனர்.