சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் செல்லக்கூடிய வண்டிப் பாதையை ஆக்கிரமித்து பட்டாசு தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்கித் தந்த வருவாய் துறை நிர்வாக அதிகாரியை கண்டித்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் விளைநிலங்களுக்குச் செல்லும் வண்டிப் பாதையை தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை நிர்வாகம் எதிர்த்து கல்குவாரி மற்றும் பட்டாசு தொழிற்சாலை கட்டியதால் விளைநிலங்களுக்கு விவசாயிகள் தங்களின் டிராக்டர்கள் மற்றும் உணவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறன ஆக்கிரமிப்பு பாதையை வருவாய்த்துறையினர் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் விவசாய தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இம்மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாதையை விவசாயிகளுக்கு மீட்டு தர வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வெம்பக்கோட்டை சல்வார்பட்டி நதிக்குடி கோப்பய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் வெம்ப கோட்டை வருவாய் வட்டாட்சியர் பாண்டீஸ்வரி அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று நவம்பர் 20ஆம் தேதிக்குள் பாதையை சரி செய்து தறபடும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் உள்ளியிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.