மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
Update: 2024-03-12 15:34 GMT
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.