பூச்சிக்கொல்லி மருந்தால் நெற்பயிர் பாதிப்பு

பூச்சிக்கொல்லி மருந்தால் நெற்பயிர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Update: 2024-06-28 15:00 GMT

விவசாயிகள்

:-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இதில், மறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தியாகராஜன் என்பவர் தனது வயலில் களைக்கொல்லி தெளித்ததால் பயிர்கள் சேதம் அடைந்ததாக குற்றம்சாட்டி சேதம் அடைந்த பயிர்களுடன்  அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்தார். 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் பெரும்பாலான இடத்தில் இலைகள் சுருண்டு சேதம் அடைந்து இருப்பதால் மகசூல் பாதியாக குறையும் அபாயம் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். அரசு சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News