ஆட்சியரகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம் !

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2024-03-05 05:24 GMT

விவசாயிகள் நூதன போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனுபவித்து வரும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் கையிலும், நெற்றியிலும் காயக் கட்டுகள் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க கோரி தில்லியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசு துப்பாக்கியால் சுடுவதைக் கண்டித்தும், வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் கோரியும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. ஜெயபால், செயலர் டி. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News