சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மோகனூர் பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-17 14:12 GMT

மோகனூர் பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி விவசாயிகள் பூரண கும்பம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில் உள்ள, வளையப்பட்டி, அரூர், புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து. இதற்காக நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் சிப்காட் அமைத்தால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிடக்கோரி இது வரை சுமார் 43 கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கொண்ட சிப்காட் எதிர்ப்பு இயக்கம் இப்பகுதியில் துவக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்ததினர், சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தல், கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம், ஆற்றில் இறங்கி போராட்டம், இறைவனிடம் மனு அளித்தல், தீச்சட்டி ஏந்தி போராட்டம், ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் போராட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு, தீபம் ஏந்தி வழிபாடு,பொங்கல் வைத்து வழிபாடு, நாமம் போட்டு போராட்டம், கலெக்டரிடம் நிலத்திற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுவரை சிப்காட் குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில், 44 வது கட்ட போராட்டமாக புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பூரண கும்பம் ஏந்தி சிப்காட்டிற்கு எதிர்ப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி ரவீந்திரன், பாஜக பிரபாகரன், விமுக மாதையன், தண்டபாணி மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, சிப்காட்டுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News