குண்டடத்தில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

குண்டடத்தை அடுத்துள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் 2வது சுற்று  தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் அப்பகுதியில் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-16 03:39 GMT

குண்டடம் பகுதியில் ருத்ராவதி. செங்காளிபாளையம், கணபதிபாளையம். சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 2-ஆவது சுற்று தண்ணீர் தற்போது வரை திறக்கப்படாததால், முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர் செய்த விவசாயிகள், தொடர்ந்து பயி ருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து குண்டடத்தில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தில் முறையிட்டும். இதுவரை 2 வது சுற்று தண்ணீர் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டடம், கோவை ஒட்டன்சத்திரம் புறவழிச்சா லையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து நீண்ட நேரமாகியும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.பின்னர் பல்லடம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் உடனடியாக உயிர் தண்ணீர் திறக்க ண்டும் எனவும், தெரிவித்து தொடர்ந்து நான்கு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குண்டடம் பகுதி மிகவும் வறட்சியான பகுதி. இங்கே பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பியே விவசாயிகள் வெங்காயம். தக்காளி, மிள காய் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றோம். மேலும் ஆடு, மாடுகளுக்கு தேவையான தண்ணீரும் பி.ஏ.பி. வாய்க்காலை நம்பியே உள்ளது. எனவே திருமூர்த்தி அணையில் இருந்து நாதகவுன்டம் பாளையம் ஷட்டரில் கிளை வாய்க்கால் மூலம் அரசு ஆணைப்படி குண்டடம் பகுதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உயிர் தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாமதம் செய்கிறார்கள். பலமுறை மனுக்கள் கொடுத்தும் நேரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதிகாரிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஆடு, மாடு மற்றும் விவசாயத்தை காப்பாற்றுவதற்காக சாலை மறிய லில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்தெரிவித்தார்.

Tags:    

Similar News