பால் கொள்முதல் விலை உயர்த்தியதற்காக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பால் கொள்முதல் விலை உயர்த்தியதற்காக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2023-12-15 09:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில், பால் உற்பத்தியாளர்கள் தீவன விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக, பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆவின் பால் கொள்முதல் விளையை லிட்டர் ரூபாய் 3 உயர்த்தி வழங்கி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத்தலைவர், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நான்கு லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைவார்கள் என்றும் இத்தொழில் அதிகமான பெண்கள் ஈடுபட்டுள்ளதால் அவருடைய வாழ்வாதாரம் உயரும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

கறவை மாடு பராமரிக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரிக்கை வைத்தோம் அதையும் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர், இதனை மிகவும் வரவேற்பதாக தெரிவித்து பால் விற்பனை விலையை உயர்த்தாமல் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News