வீட்டுமனை தகராறில் தந்தை-மகன் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், பெரிய கிராம் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட வீட்டுமனை தகராறில் தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
Update: 2024-05-13 02:35 GMT
தந்தை மகன் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரிய கிராமம் பகுதியை சேர்ந்தவர் அன்பு (56). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலாஜி (40). இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில் இருவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அன்பு, அவரது மகன் பூபாலன் (26) ஆகியோர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து அன்பு, பூபாலன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.