மகன் இறந்த வேதனையில் தந்தை தற்கொலை
தூத்துக்குடி அருகே மகன் இறந்த 30வது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-10 01:05 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சந்தன மாரியப்பன் (40). இவரது மகன் மகேஷ்குமார் என்பவர் கடந்த மார்ச் 7ஆம் தேதி விபத்தில் இறந்து விட்டார். மகன் இறந்ததால் சந்தன மாரியப்பன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது மகனின் 30ஆம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு சந்தன மாரியப்பன் விஷம் குடித்து தற்காெலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.