எட்டையபுரம் அருகே விழாவில் மின்சாரம் தாக்கி தந்தை பலி: மகன் காயம்

எட்டையபுரம் அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்தார், அவரது 13வயது மகன் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-05-21 12:29 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயணன் மகன் சேதுபாண்டி (40), அவரது மகன் சரவணகுமார் (13). இவர்கள் 2பேரும் நேற்று அங்குள்ள கருப்பசாமி கோவிலில் நடந்த கொடைவிழாவில் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு அலங்கார மின்விளக்குகள் பாெருத்தப்பட்டிருந்தது. அப்போது அங்குள்ள கம்பத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த சேதுபாண்டி மற்றும் அவரது மகன் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் சேதுபாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எட்டையபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News