சங்ககிரி அருகே கிணற்றில் பெண் பிணம் - போலீஸ் விசாரணை

சங்ககிரி அருகே கிணற்றில் பெண் பிணம்;

Update: 2023-11-24 12:03 GMT

தேவூர் அருகே விவசாய கிணற்றில் பெண் பிணமாக கிடந்தார். தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண் சடலம் மீட்டனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே கைகோலப்பாளையம் பகுதியில் சீரங்கன் என்பவரது விவசாய கிணற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தேவூர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டனர். பின்னர் இறந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சீரங்கன் என்பவரது மனைவி பஞ்சாயி(45) என்பதும் இவருக்கு திருமணமாகி 9 வயதில் பரமேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவருக்கு தீராத தலைவலி இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக மருத்துவரிடம் அணுகி பரிசோதனை செய்து வந்ததாகவும். கடந்த புதன்கிழமை அன்று இரவு தனது தாயார் வீட்டிற்கு சென்று இரண்டு தினங்களில் இருந்து விட்டு வருவதாக சென்றவர் காணாமல் போனதாக தெரிகிறது.

Advertisement

இது குறித்து அவரது பெற்றோரும் கணவரும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத சூழ்நிலையில் பஞ்சாயி வீட்டின் அருகில் உள்ள சீரங்கன் என்பவரது விவசாய கிணற்றில் சடலமாக மீட்கபட்டுள்ளார். இவர் தனது தீராத தலைவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஞ்சாயி தலைவலி காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கைக்கோள பாளையம் கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News