குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

மாரண்டஅள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-28 02:59 GMT

தற்கொலை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் மூர்த்தி இவருடைய மனைவி முனியம்மாள் இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மூர்த்தி தினமும் மதுகுடித்து விட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்துள்ளார். மேலும் அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை மீண்டும் கணவன்-மனைவிஇடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த முனியம்மாள் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாரண்ட அள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரண்ட அள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News