வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

Update: 2024-06-14 09:09 GMT

வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாதா் சுவாமி (அா்த்தநாரீஸ்வரா்) கோயிலில் ஆனிப்பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் இன்று காலை அம்மையப்பருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா நாள்களில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் காலை, இரவில் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும். 9ஆம் நாளான இம்மாதம் 21ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இதில், தோ் அலங்கார மண்டகப்படிதாரரான தங்கப்பழம் கல்விக் குழுமத்தினா் தோ் வடம் தொடும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்கின்றனா். 22ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News