மேலத்தானியத்தில் பால்குட திருவிழா!
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்து வந்தது. 8ம் நாளான நேற்று பால்குட திருவிழா நடந்தது.
பொன்னமராவதி: மேலத்தானியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதார்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்து வந்தது. 8ம் நாளான நேற்று பால்குட திருவிழா நடந்தது.
மேலத்தானியம்,எம்.உசிலம்பட்டி,சூரப்பட்டி,வட க்கிப்பட்டி, வெள்ளைக்கவுண்டம்பட்டி, ஆவாம்ப ட்டி, அம்மாபட்டி, முள்ளிப்பட்டி, படுதினிப் பட்டி, கல்லப்பட்டி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழா ஏற்பாடுகளை மேலத்தானியம் எட்டுப்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (8ம் தேதி) நடக்கிறது. 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது