தீபத் திருவிழா: கோபுரங்களை கிரேன் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

Update: 2023-11-10 04:42 GMT

ராட்சத கிரேன் மூலம் தூய்மைப்படுத்தும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி, தொடர்ந்து பத்து தினங்கள் காலை இரவு என இரு வேலைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து நிறைவு நாளான நவம்பர் 26 ஆம் தேதி திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் பஞ்சரதங்கள், சுவாமி வீதியுலா வர உள்ள வாகனங்கள் அனைத்தையும் ஊழியர்கள் பழுது பார்க்கும்வேலையிலும் வர்ணம் தீட்டும் பணியிலும் இரவு பகலாக மும்முரமாக பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ராட்சத கிரேன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலம் கோபுரங்களில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றியும், புறா எச்சங்களை தூய்மைப்படுத்தியும் கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News