தூத்துக்குடி அரசுப் பள்ளியில் கோள்கள் திருவிழா!

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது.

Update: 2024-06-16 14:11 GMT

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது.


தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வானில் கோள்களை காண்பது குறித்தும்,இன்றைய சூழ்நிலையில் வானியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் கோள்கள் பற்றிய விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இமாகுலேட் குளோரியா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் வானியல் குறித்து பயிற்சி அளித்தார். தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பள்ளி மாணவர்களுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி பேசினார். இதில் ஊராட்சி செயலர்அழகு பெருமாள் சாமி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News