விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா

பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2024-06-19 13:10 GMT

 பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ், முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்( பொ)  எஸ்.திலகவதி முன்னிலை வகித்தார்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  கா.அண்ணாதுரை தலைமை வகித்து பேசும்பொழுது, "விவசாயிகளை பசுந்தாள் உரங்களை பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம், மண்ணில் உயிர் கரிம சத்தினையும் பயிர் மகசூலையும் அதிகரிக்கலாம். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம்" என்றார்.

பின்னர் வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.திலகவதி பேசுகையில்,"ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால் மண்ணில் உள்ள சத்துக்களை அதிகளவில் மண்ணில் இருந்து பயிர்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் மண்ணில் அதிக அளவில் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு மண்ணின் வளம் குறைந்து விடுகிறது. மண்ணின் வளத்தை மேம்படுத்தினால் மட்டுமே மண்ணின் கட்டமைப்பு, மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை மற்றும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எனவே மண்வளத்தை மேம்படுத்த 50 விழுக்காடு மானிய விலையில் ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர‌ விதைகள் மற்றும் 50 விழுக்காடு மானியத்தில் திரவ உயிர் உரங்கள்  ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதால்  விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை  அலுவலரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார். 

நிகழ்ச்சியின் நிறைவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பயனாளிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், உயிர் உரங்கள் போன்ற இடுபொருள்களை வழங்கினார். விதை ஆய்வாளர் நவீன் சேவியர், வேளாண் அலுவலர் சன்மதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News